
நடப்பு ஐபிஎல் சீசினில் 3 முறை கோல்டன் டக்கான விராட் கோலி, நேற்று குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஃபார்ம்க்கு திரும்பினார். 54 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி, 8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 73 ரன்களை விளாசி அசத்தினார்.
கோலியின் ஆட்டத்தால் முக்கிய போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஃபார்ம்க்கு திரும்பியது குறித்து கோலி விளக்கினார்.
இதுகுறித்து பேசிய அவர், “தொடர்ந்து அவுட்டாகி வந்ததும், எனக்கு என்ன நடக்கிறது என்று நானே யோசிக்க தொடங்கிவிட்டேன். 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடரின் போது என் கேட்ச் மிஸ் ஆனது, அப்போது 2014ஆம் ஆண்டு சொதப்பியது நினைவுக்கு வந்தது. ஆனால் அன்று சதம் விளாசினேன். அதன் பிறகு நான் சிறப்பாக விளையாட தொடங்கினேன். இது போல் நிறைய முறை நிகழ்ந்துள்ளது. ஆனால் அப்போது எல்லாம் (கேட்ச் மிஸ்சாகி வாய்ப்பு கிடைக்கிறதே என) ஏமாற்றமாக இருக்கும். அதற்காக வருத்தப்பட்டு கொண்டு இருப்பது நியாயம் அல்ல.