பிஎஸ்எல் தொடரில் சதமடிப்பதே தற்போதைய குறிக்கோள் - பாபர் ஆசாம்!
பிஎஸ எல் தொடரில் சதம் அடிப்பது எனக்கு கனவாக இருந்து வருகிறது. நான் ஏற்கனவே சர்வதேச டி20 தொடரில் மற்றும் சில லீக்குகளில் சதம் அடித்திருக்கிறேன் என பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உள்நாட்டில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான ஐபிஎல் தொடரின் தாக்கம் உலகம் முழுவதும் பல கிரிக்கெட் வாரியங்களை இப்படியான டி20 தொடர்களை நடத்த வைத்திருக்கிறது.அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உள்நாட்டில் பி எஸ் எல் என்ற டி20 லீக்கை நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு முகமது ஹபிஸ் இடம் பெற்று இருந்த அணி கோப்பையை வென்றது. முகமது ரிஸ்வான் மற்றும் சதாப் கான் போன்ற பாகிஸ்தானுக்காக ஆடும் சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். ஆனால் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த பாபரின் செயல்பாடும் அந்த அணியின் செயல்பாடும் மோசமாகவே இருந்தது. அந்த அணிக்காக கடந்த சீசனில் 343 ரன்களை 38 ரன் சராசரியில் பாபர் எடுத்தார். ஆனால் அவரது ஸ்ட்ரைக் ரேட் மிக மோசமாக 118 என்று இருந்தது.
Trending
அதேசமயத்தில் ஒட்டுமொத்த பி எஸ் எல் லீக்கில் பாபர் 68 போட்டிகளில் 42 சராசரியில் 23 அரை சதங்கள் மற்றும் அதிகபட்ச ரன்னாக 90 ரன் என 2413 ரன்கள் குவித்து, இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையுடன் இருக்கிறார். பாபர் ஆஸம் இந்தத் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக ஒரு சீசனிலும், கராச்சி கிங்ஸ் அணிக்காக ஆறு சீசன்களிலும் விளையாடி உள்ளார். வரப்போகும் சீசனில் இவர் கராச்சி கிங்ஸ் அணியை விட்டு பெஷாவர் சல்மி அணிக்கு விளையாடுகிறார்.
இதுகுறித்து பேசிய பாபர் ஆசாம், “பிஎஸ எல் தொடரில் சதம் அடிப்பது எனக்கு கனவாக இருந்து வருகிறது. நான் ஏற்கனவே சர்வதேச டி20 தொடரில் மற்றும் சில லீக்குகளில் சதம் அடித்திருக்கிறேன். இந்த பி எஸ் எல் தொடரிலும் மூன்று இலக்க ரன்னை நான் எட்டுவேன் மிகப்பெரிய ஸ்கோர் விரைவில் வரும் என்று நம்புகிறேன். ஒரு புதிய அணியுடன் ஒரு புதிய சீசன். வருகின்ற பி எஸ் எல் தொடர் எனக்கு கூடுதல் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
மேலும் இந்த பயணத்தில் ஒரு நல்ல ஆரம்பத்தை உண்டாக்க விரும்புகிறேன். இஸ்லாமாபாத் யுனைடெட் அணி உடன் ஒரு சீசன் மற்றும் கராச்சி கிங்ஸ் அணி உடன் ஆர் சீசன்கள் என வெவ்வேறு வீரர்கள் உடன் ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது மிகவும் உதவியாக இருந்தது. மற்ற அணி வீரர்கள் உடன் பழகும் பொழுது அவர்களின் மனநிலை, அவர்களின் பயிற்சி முறை, அவர்கள் வெவ்வேறு சூழல்களை கையாளும் முறை நீங்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now