Advertisement

வலிமையான பேட்டிங் இல்லாத வரை தோல்வி மட்டும் தான் - டேவிட் வார்னர் வருத்தம்

சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 9ஆது லீக் ஆட்டத்தில் சன்ரைச

Advertisement
'It Is Just Poor': SRH's Batting Disappoints Warner
'It Is Just Poor': SRH's Batting Disappoints Warner (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 18, 2021 • 01:31 PM

சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 9ஆது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 18, 2021 • 01:31 PM

இப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை  அணி 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. 151 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 13 ரன்களில் தோல்வி அடைந்தது.

Trending

சன்ரைசர்ஸ் அணியில் பேர்ஸ்டோ, வார்னர் இருவரைத் தவிர வேறு எந்த வீரரும் சரியாக விளையாடவில்லை. வார்னர், பேர்ஸ்டோ இருவரும் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை எந்த வீரரும் கடைசிவரை பயன்படுத்தவில்லை.

ஒரு கட்டத்தில் 71 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து வலுவாக இருந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்த 66 ரன்களுக்குள் மீதமிருந்த 9 விக்கெட்டுகளை இழந்து உள்ளது. அதிலும் கடைசி 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது ஒட்டுமொத்த பேட்டிங் தோல்வி.

போட்டி முடிவுக்கு பின் பேசிய டேவிட் வார்னர், ”இந்தத் தோல்வியை எவ்வாறு எடுத்துக் கொள்வது, என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.எங்கள் தோல்விக்கு காரணமே ஆழமான பேட்டிங் இல்லாததுதான். கடைசிவரை நின்று ஒருவர் கூட பேட்டிங் செய்யவில்லை. ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், ஆழமான பேட்டிங் இல்லாதவரை ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாது.

ஹர்திக் பாண்டியாவின் சிறந்த பீல்டிங்கில் நான் விக்கெட்டை இழந்தேன். ஆனால் கிரிக்கெட்டை பொருத்தவரை 150 ரன்கள் என்பது எளிதாக அடைந்து விடக்கூடிய இலக்குதான். சரியான பார்டனர்ஷிப் மட்டும் கிடைத்துவிட்டால், ஒரு முனையில் அவரை நிறுத்திவிட்டு,எளிதாக இலக்கை அடைந்துவிடலாம்.

இப்போதுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் வீரர்களுக்கு ஸ்மார்ட் கிரிக்கெட் அவசியம். அதிலும் நடுவரிசை வீரர்களுக்கு ஸ்மார்ட் கிரிக்கெட்டை எவ்வாறு விளையாடுவது என்பது தெரிய வேண்டும். பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள், ஆடுகளம் மெதுவானதாக இருந்தாலும், அதற்கு ஏற்றார்போல் பந்துவீசினார்.

தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும், அடுத்த போட்டியில் பேட்டிங் வரிசை ஆழமாக இருக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் தங்களை சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டார்கள், நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வெற்றி அவசியம், வெற்றி இருந்தால்தான் புன்னகை வரும்.

வில்லியம்ஸன் உடல்நிலை குறித்து அணியின் உடற்தகுதி நிபுணரிடம் பேசுவேன், உடல் தகுதியுடன் இருந்தால், நிச்சயம் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement