
'It is Next to Impossible': Gautam Gambhir Highlights Why KL Rahul Can't Keep Wickets in Test (Image Source: Google)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியிலும், தென் ஆப்பிரிக்க அணி 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக அவருக்கு பதிலாக கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பராக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.