Advertisement

அணிக்கு முக்கிய பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - டேரில் மிட்செல்!

எங்களுடைய திட்டம் தெளிவாக இருந்தது, இந்தியாவை வீழ்த்தினோம் என ஆட்டநாயகன் விருதை வென்ற டேரில் மிட்ச்சல் தெரிவித்துள்ளார்.

Advertisement
“It Is Nice To Contribute To A Score”- Daryl Mitchell
“It Is Nice To Contribute To A Score”- Daryl Mitchell (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 28, 2023 • 12:41 PM

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 176 ரன்கள் அடித்தது. 19ஆவது ஓவர் வரை இந்திய அணியின் கட்டுப்பாட்டிற்குள் ஆட்டம் இருந்தது. ஆறு விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து அணி அடித்திருந்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 28, 2023 • 12:41 PM

அர்ஷதீப் சிங் வீசிய கடைசி ஓவரில் டெரல் மிட்ச்சல் 27 ரன்கள் விளாசினார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. டேரல் 30 பந்துகளில் 59 ரன்கள் அடித்திருந்தார். இதைதொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 15 ரன்களுக்கு மூன்று விக்கெடுகளை இழந்து பரிதவித்தது. சிறந்த பார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் 34 பந்துகளில் 47 ரன்கள் அடித்தார். பாண்டியா 21 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

Trending

இறுதிவரை போராடிய வாஷிங்டன் சுந்தர் 28 பந்துகளில் 50 ரன்கள் அடிதது ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்த இந்திய அணி, 21 ரன்கள் வித்தியாசத்தில் சந்தித்தது. இந்தியா கடைசி ஓவரில் 27 ரன்கள் வாரிக் கொடுத்தது. இது மட்டுமே இந்திய அணிக்கு வித்தியாசமாக அமைந்துவிட்டது என்று தெளிவாகத் தெரிந்தது. சிறப்பாக விளையாடிய டேரல் மிட்ச்சல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய டேரல் மிட்ச்சல், இந்திய அணியின் பலம் அறிந்து சரியான திட்டத்துடன் களமிறங்கி வெற்றி பெற்றோம் என கருத்து தெரிவித்தார். 

இதுகுறித்து பேசிய அவர், “இறுதிவரை விளையாடி அணிக்கு முக்கிய பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் பந்துவீச்சிலும் நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். டாப் ஆர்டரில் களமிறங்கிய வீரர்கள் சுழல் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு திணறினர். அதைப் புரிந்து கொண்டு நிதானமாக விளையாடினேன். சரியாக பாட்னர்ஷிப் அமைத்து எந்த ஓவரை டார்கெட் செய்ய வேண்டும் என்று திட்டத்துடன் களமிறங்கினேன்.

கான்வெ ஆட்டம் இழந்த பிறகு எனக்கு தெளிவாக தெரிந்து விட்டது. விக்கெட் இழக்காமல் இறுதிவரை பொறுமையாக காத்திருந்து அடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தேன். அதேபோல் எங்களது திட்டமும் எடுபட்டது. இந்தியா போன்ற பலமிக்க அணியை திட்டமிட்டு வீழ்த்துவது நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. மிடில் ஓவர்களில் அவசரம் காட்டாமல் பொறுமையாக காத்திருப்பதும், இது போன்ற போட்டிகளில் திறமை என்பதை புரிந்து கொண்டேன்” என்று தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement