
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல் சுற்றில் மோசமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, சூப்பர் 12 தகுதி பெறாமல் வெளியேறியது. இதையடுத்து தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவர் விடைபெறுகிறார்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் கிடைத்த தோல்வியால் கேப்டன் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “எதிர்காலம் எப்படியிருக்கும் எனத் தெரியவில்லை. அனைவருக்கும் இது நல்ல பாடமாக இருந்தது. அடுத்து என்ன நடக்கும் என்பதைக் காலம் தான் சொல்லவேண்டும். இப்போது அவரவர் திறமையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஓய்வு, காயத்தைக் குணமாக்கும். உள்ளுக்குள் மிகுந்த வேதனையுடன் உள்ளோம். இந்த வேதனையை ஊக்கமாக்கிக்கொள்ள வேண்டும். வலுவான அணியாக மீண்டு வர வேண்டும்.