
நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது இந்த ஐபிஎல் தொடரில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான விசயங்கள் குறித்து வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை மனம் திறந்தவாறு பேசி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த போட்டியின் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் செய்த தவறால் வெற்றி பெற்ற லக்னோ அணியானது த்ரில் வெற்றியை ருசித்து இருந்தது. அப்போது கடைசி பந்தில் பேட்டிங் செய்த ஆவேஷ் கான் ரன் ஓடி முடித்ததும் வெற்றியை கொண்டாடும் வகையில் தனது ஹெல்மெட்டை கழற்றி தரையில் எறிந்தார். அந்த விவகாரம் அப்போதே காரசாரமாக பேசப்பட்டது. அதோடு போட்டி முடிந்து செய்த இந்த செயலுக்காக அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி அவர் வீசியெறிந்த ஹெல்மெட் நிக்கோலஸ் பூரானுடைய ஹெல்மெட் என்று தெரிய வந்ததால் அவரை ரசிகர்கள் கிண்டலும் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் இந்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வு குறித்து பேசியுள்ள ஆவேஷ் கான், “அந்த போட்டி முடிந்து ஏராளமான ரசிகர்கள் என்னை கிண்டல் செய்து பல புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.