ஐபிஎல் 2022: விராட் கோலியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - கிளென் மேக்ஸ்வெல்!
விராட் கோலியின் தற்போதைய நிலை குறித்து ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐபிஎல் 15ஆவது சீசன் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த முறை கோப்பையை வெல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீது தான் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.
கடந்த சீசனுடன் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து அந்த அணியின் புதிய கேப்டனாக தென் ஆப்பிரிக்க வீரர் டூ பிளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். டாப் ஆர்டரில் விராட் கோலி, மேக்ஸ்வெல், டூப்ளசிஸ் என அட்டகாச வீரர்கள் இருப்பதால் அந்த அணிக்கு பேட்டிங் அதிரடியாக உள்ளது.
Trending
இந்நிலையில் இதில் விராட் கோலி தான் இந்த முறை டேஞ்சர் வீரர் என மேக்ஸ்வெல் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கேப்டன்சி தான் கோலிக்கு பெரிய பொறுப்பாக இருந்தது. தற்போது அது இல்லை என்பதால் கோலியுடைய ஆக்ரோஷத்தை இனி முழுமையாக பார்க்கலாம். எதிரணிகள் அவரின் பேட்டிங்கை பார்த்து பயப்பட வேண்டிய சூழல் வரும்.
அடுத்த சில ஆண்டுகளுக்கு விராட் கோலிக்கு எந்தவித அழுத்தங்களும் இல்லை. இதனால் அவர் தனது பழைய ஃபார்மை மீண்டும் கொண்டு வருவார். எப்போதுமே எதிரணிக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கக்கூடியவர் விராட் கோலி. கோலியிடம் இந்தாண்டு ஒரு தனிப்பட்ட மாற்றம் தெரிகிறது.
விராட் கோலியை எப்போதுமே சரியான முடிவு எடுக்கிறாரா என்பதை வைத்துதான் மதிப்பிடுவார்கள். ஆனால் தற்போது அவரின் உணர்ச்சிகளை வைத்து மதிப்பிடுகிறார்கள். சமீபத்தில் மிகவும் நிதானமான கோலியை பார்க்க முடிகிறது. அவருடன் சேர்ந்து விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. எதிரணிக்கு தலைவலி வந்துக்கொண்டே உள்ளது” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now