
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது. ஏனெனில் இந்திய அணி அந்த இடத்தில் தான் பெரியளவில் சறுக்கியது. அதுவே இறுதிப் போட்டியை இழப்பதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்திய அணியின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான். ஆனால், முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் பாண்டியா, தீவிர சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டு வந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஆனாலும், அவர் பேட்டிங் தான் செய்கிறாரே ஒழிய, பவுலிங் செய்யவில்லை.
அதேசமயம், பாண்டியாவுக்கு மாற்று ஆல் ரவுண்டாக கருதப்பட்ட ஷர்துல் தாகூர் மீதும் கோலி பெரியளவில் நம்பிக்கை வைக்கவில்லை. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஒருவேளை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.