1-mdl.jpg)
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கும் ஆச்சர்யத்துக்கும் பஞ்சமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது. கணிப்புகள் தலைகீழாக மாறியிருக்கின்றன. கவனம் பெறாத வீரர்கள் கலக்கியிருக்கிறார்கள். போட்டி முடிந்துவிட்டது என நினைக்கையில் ஆட்டம் சூடுபிடித்திருக்கிறது.
இப்படி ஒவ்வொரு போட்டியும் நடந்துகொண்டிருக்க, நேற்றைய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியும் அதே விறுவிறுப்பு குறையாமல் நடந்து முடிந்திருக்கிறது. பெங்களூர் அணியிகன் ஹோம் கிரவுண்டான சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் உற்சாகம், அழுகை, ஏமாற்றம் என கலவையான உணர்வுகளை ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறது.
இந்தப்போட்டியில் 200+ சேஸிங்கின் போது லக்னோ அணிக்காக வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகியிருக்கிறார். ஆட்டநாயகன் விருதையும் வென்றிருக்கிறார். நிக்கோலஸ் பூரன் க்ரீஸுக்குள் வந்த சமயத்தில் லக்னோ அணிக்கு தேவைப்பட்ட ரன்ரேட் 12 க்கும் மேல் இருந்தது. உள்ளே வந்து சிறு தாமதம்கூட இன்றி தன்னுடைய மிஷனைத் தொடங்கினார் பூரன். கரன் சர்மாவிற்கு எதிராக அவர் சந்தித்த முதல் பந்தை டாட் ஆக்கியிருந்தார்.