எங்களை ஆபாச வார்த்தைகளில் வசைபாடினர் - ஷர்துல் தாக்கூர் ஓபன் டாக்!
இங்கிலாந்து தொடரின் போது இந்திய அணி வீரர் ஒருவரை இங்கிலாந்து வீரர்கள் மிகவும் மோசமான வார்த்தைகளில் வசைபாடியதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க 5வது டெஸ்ட் போட்டியானது கரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக இத்தொடரின் வெற்றியாளர் குறித்து பிரச்சினைகள் எழுந்தன. இந்நிலையில் இந்த தொடரின் போது இந்திய அணி வீரர் ஒருவரை இங்கிலாந்து வீரர்கள் மிகவும் மோசமான வார்த்தைகளில் வசைபாடியதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய ஷர்துல் தாக்கூர், “லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின்போது ஆண்டர்சனை கடுமையான பந்துவீச்சின் மூலம் தாக்க வேண்டும். ஆனால் அதன் பிறகு அந்த தாக்கம் ஓவல் மைதானம் வரை தொடர்ந்தது. பின்பு நான் ஆண்டர்சனிடம் சென்று உங்கள் வீரர்கள் பும்ராவை ஆபாசமான வார்த்தைகளால் பேசினர்.
இதுபோன்ற வார்த்தைகளை பொது வெளியில் சொல்லக்கூடாது. அந்த நிகழ்வுதான் இந்திய அணி வீரர்கள் வெகுண்டெழ காரணம். டெய்ல் எண்டர்களாகிய நாங்கள் வெளிநாட்டு மைதானங்களில் பேட்டிங் செய்யும் போது ஆஸ்திரேலிய பவுலர்களை சந்தித்தோம். ஆஸ்திரேலியாவில் கூட எங்கள் அணியின் கடைசி வீரரான நடராஜனுக்கு எதிராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் கடுமையான பவுன்சர்களை வீசினர்.
அப்படி நாங்கள் எதிர் கொண்டதை தான் தற்போது இங்கிலாந்து அணிக்கெதிராக செய்தோம். வெளிநாட்டு வீரர்கள் எங்களுக்கு எதிராக அப்படி பந்து வீசுவது சரி என்றால் அதையே நாங்கள் திருப்பி செய்தால் தவறா ? நாங்கள் ஏன் பவுன்சர் பந்துகளை வீச கூடாது ? பாடி லைன் பந்துகளை ஏன் வீசக்கூடாது ? நாங்கள் யாரையும் திருப்திபடுத்த விளையாடவில்லை. வெற்றி பெறவே நாங்கள் விளையாடுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்த டெஸ்ட் தொடரின் போது இந்தியா - இங்கிலாந்து அணி வீரர்களுக்கு இடையே சில வார்த்தை போர் மற்றும் உரசல்கள் இருந்தாலும் இந்த தொடரானது கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது. அது அதுமட்டுமின்றி கடைசி டெஸ்ட் போட்டி ரத்தானதால் இந்த தொடரில் யார் வெற்றி பெற்றார்கள் என்ற தெளிவான தகவல்கள் கூட இதுவரை கிடைக்காததும் குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now