உலகின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக ஜொலித்து வந்தவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அசுர பலத்துடன் திகழ்ந்தார். ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்று அணிக்கு திரும்பிய பிறகு, டெஸ்ட் போட்டியில் மட்டும் சிறப்பாக விளையாடினார்.
ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகப்பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. குறிப்பாக கடந்த ஒருவருடமாக இவரது ஆட்டம் எடுபடவில்லை. இதனால் சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெஞ்ச்-ல் அமர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தான் நேற்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இந்த போட்டியில் 78 பந்தில் 80 ரன்கள் விளாசிய ஸ்டீவ் ஸ்மித் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.