
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய 8ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 17 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில், அனுபவ வீரர்கள் சரியாக செயல்படாததே தோல்விக்கு காரணம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சஞ்சு சாம்சன், “இப்போட்டியில் நாங்கள் மிகவும் சிறப்பாகத் தொடங்கினோம், பவர்பிளேயில் 90 ரன்கள் எடுத்திருந்த தொடக்க வீரர்களிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியவில்லை. ஆனால் பவர்பிளேயில் நாங்கள் பெற்ற வேகத்தை எங்களால் தொடர முடியவில்லை. மேலும் இன்றைய போட்டிக்கான இலக்கு எங்களுக்கு எட்டக்கூடிய ஒன்றாகவே இருந்தது. மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் எதிர்பர்ததை விட பேட்டிங் செய்ய சற்று கடினமாக இருந்தது.