
கடந்த சில மாதங்களாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் ஒருநாள் போட்டிகளில் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரும் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. தற்போது இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். இந்த நிலையில், மோசமான ஃபார்மிலிருந்து மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கான நேரம் வந்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.