
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இஷான் கிஷனின் அபாரமான சதத்தின் மூலமாகவும், டிராவிஸ் ஹெட்டின் அரைசதத்தின் காரணமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷன் 106 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 67 ரன்களையும் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், நிதீஷ் ரானா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த சஞ்சு சாம்சன் - துருவ் ஜூரெல் இணை அதிரடியாக விளையாடி தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.