Advertisement

அணியை வழிநடத்த வாய்ப்பு கிடைத்தால் கவுரவமாக கருதுவேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!

வருங்காலத்தில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால் அதைக் கவுரவமாகக் கருதுவேன் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். 

Advertisement
It Will Be An Honour To Captain The Indian Side, Reveals Jasprit Bumrah
It Will Be An Honour To Captain The Indian Side, Reveals Jasprit Bumrah (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 17, 2022 • 06:58 PM

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்று தொடங்குகிறது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும் துணை கேப்டனாக பும்ராவும் செயல்படவுள்ளார்கள்.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 17, 2022 • 06:58 PM

இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த துணை கேப்டன் பும்ரா, “டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி எடுத்த முடிவை மதிக்கிறோம். அணிக் கூட்டத்தில் இதைப் பற்றி சொன்னார். அவருடைய சாதனைகளுக்காக அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம். 

Trending

அவருடைய முடிவு சரியா தவறா என நான் கருத்து கூற முடியாது. கோலியுடன் இணைந்து விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும். அவர் கேப்டனாக இருந்தபோது டெஸ்ட் அணிக்கு அறிமுகமானேன். அணியில் ஓர் முக்கிய உறுப்பினராக அவர் எப்போதும் இருப்பார். 

அணிக்குத் தலைமை தாங்கும் ஆசை எல்லோருக்கும் இருக்கும். என்றாவது ஒருநாள் அணிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தால் அதைக் கவுரவமாகக் கருதுவேன்” என்று தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement