
'It Will Be Tough But Exciting' Reckons Duanne Olivier Ahead Of Tests Against India (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கு பந்து வீசுவது கடினமானது என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஒலிவியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “உலக தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிரான இந்த தொடர் எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தொடர் இருக்கும். இது ஒரு உற்சாகமான சவால். விராட் கோலிக்கு பந்து வீசுவது கடினமாக இருக்கும். ஆனால் அதை உற்சாகமாக எதிர்பார்க்கிறேன்.