-mdl.jpg)
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜிம்பாப்வேவின் ஹரேரா மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி வெறும் 161 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதன்பின் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி 25.4 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்தியா ஜிம்பாப்வே இடையேயான கடைசி ஒருநாள் போட்டி 22ஆம் தேதி நடைபெற உள்ளது.