
"It worked out pretty well, hope it works out well in the final game as well," KKR skipper (Image Source: Google)
ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.
இந்த வெற்றி குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் பேட்டியளித்த கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், “தற்போதைய சூழலில் தமது அணி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் உள்ளது. இந்த போட்டியில் தமது வீரர்கள் பயமின்றி விளையாடினர். அனைவரும் சரியாக செயல்பட்டனர்.
எனினும் தமது அணி முழு திறனுடன் இன்னும் விளையாடவில்லை, அது குறித்து ஆட்டத்திற்கு முன்னர் சக வீரர்களிடம் பேசியனேன். ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிக ரன் எடுக்க வேண்டும் என்பதால், அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது சக வீரர் முடிந்தவரை அவருக்கு பேட்டிங் வாய்ப்பை கொடுப்பதே எங்களது திட்டமாக இருந்தது.