
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆஆவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்களையும், இங்கிலாந்து அணி 391 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியை விட இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலை உள்ளது.
மீதம் இரண்டு நாட்கள் போட்டி நடைபெற உள்ளதால் இந்த போட்டியில் வெற்றி, தோல்வி முடிவுகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் என்று வலுவாக இருந்தது.
இந்நிலையில் இந்திய அணி அடுத்த 88 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இப்படி இந்திய அணியின் சரிவுக்கு காரணமாக ஆண்டர்சன் திகழ்ந்தார். 62 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 31ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியயும், லார்ட்ஸ் மைதானத்தில் ஏழு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திம் அசத்தியுள்ளார்.