
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக மதிப்பிடப்படும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோருடன் பாபர் ஆசாமும் சேர்க்கப்பட்டுள்ளார். 27 வயதான பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக விளையாடி ரன்களை குவித்துவருகிறார். ஒருசிலர் அவரை விராட் கோலியை விட சிறந்த வீரராக மதிப்பிடுகின்றனர்.
எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், இடையிடையே ஒருசில போட்டிகளில் தொடர்ச்சியாக சரியாக ஆடாததும், ஃபார்மில் இல்லாமல் இருப்பதும் இயல்பே. அது எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனுக்கும் நடக்கும். விராட் கோலியே கடந்த 2 ஆண்டுகளாக பெரிதாக ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார்.
இந்நிலையில், அந்தவகையில் பாபர் ஆசாம் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் சொதப்பலாக பேட்டிங் ஆடினார். டி20 உலக கோப்பை தொடரில் 303 ரன்களை குவித்த பாபர் ஆசாம் தான், அந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்ந்தார்.