Advertisement
Advertisement
Advertisement

கடைசி டெஸ்டில் விளையாடும் வார்னரின் உடமைகள் திருட்டு; திருடனுக்கு கோரிக்கை!

ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் டேவிட் வார்னர் தன் கிரிக்கெட் வாழ்வின் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் நிலையில், அவரது உடைமைகளை யாரோ ஒருவர் திருடிய சம்பவம் நடந்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 02, 2024 • 11:38 AM
கடைசி டெஸ்டில் விளையாடும் வார்னரின் உடமைகள் திருட்டு; திருடனுக்கு கோரிக்கை!
கடைசி டெஸ்டில் விளையாடும் வார்னரின் உடமைகள் திருட்டு; திருடனுக்கு கோரிக்கை! (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், இப்போட்டிக்காக ஆஸ்திரேலிய அணி மெல்போர்னிலிருந்து சிட்னி சென்றடைந்தது. இந்நிலையில் மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு சென்ற போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னரின் உடைமைகள் காணாமல் போயுள்ளது. அதில் டேவிட் வார்னரின் டெஸ்ட் போட்டிகளில் அணியும் தொப்பி உள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளுக்கு என பிரத்யேகமாக அளிக்கப்படும் பச்சை நிற தொப்பி அவர்களுக்கு மிகப் பெரும் கவுரவமான ஒன்று.

Trending


திருடப்பட்ட அந்த பையில் அவரது இரண்டு பச்சை நிற தொப்பி உள்ளது. அதில் ஒன்று அவருக்கு முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன போது அளிக்கப்பட்டது. அதை அணிந்து தன் கடைசி போட்டியில் விளையாட வேண்டும் என நினைத்து இருந்த வார்னர் தற்போது சோகத்தில் இருக்கிறார். இந்த நிலையில், அவர் தனது பையை திரும்ப ஒப்படைக்குமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

அதில் அவர், "என் லக்கேஜில் இருந்து என் பையை யாரோ ஒருவர் எடுத்து இருக்கிறார்கள். அதில் என் குழந்தைகளுக்கு வாங்கிய சில பரிசுப் பொருட்கள் உள்ளன. அதில் தான் என் பச்சை நிற தொப்பியும் உள்ளது. அது எனக்கு உணர்வுரீதியான ஒன்று. என் கடைசி டெஸ்ட் போட்டியில் அதை அணிந்து செல்ல வேண்டும் என விரும்புகிறேன்" எனக் கூறி இருக்கிறார்.

 

மேலும், "உங்களுக்கு அது போன்ற பை தான் வேண்டும் என நினைக்கிறேன்., என்னிடம் ஒரு பை உள்ளது, அதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது" என முகம் தெரியாத திருடனிடம் கோரிக்கை வைத்து இருக்கிறார் வார்னர். இந்நிலையில், டேவிட் வார்னரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.  


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement