Advertisement
Advertisement

David warner retirement

டி20 உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு; வார்னர் ஓபன் டாக்!
Image Source: Google

டி20 உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு; வார்னர் ஓபன் டாக்!

By Bharathi Kannan February 09, 2024 • 21:32 PM View: 125

ஆஸ்திரேலிய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ஹாபர்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 213 ரன்களைக் குவித்தது.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 36 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 70 ரன்களைச் சேர்த்தார். இதனைத்தொடர்ந்து  விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங், ஜான்சன் சார்ல்ஸ், ஜேசன் ஹோல்டர் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி 20 ஓவர்களில் 202 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Related Cricket News on David warner retirement