பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடவுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் ஷதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும், ரைலீ ரூஸோவ் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. நடப்பு பிஎஸ்எல் தொடரில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியளில் மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - இஸ்லாமாபாத் யுனைடெட் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ்
- இடம் - கடாஃபி கிரிக்கெட் மைதானம், லாகூர்
- நேரம் - இரவு 7.30 மணி
பிட்ர் ரிப்போர்ட்
இப்போட்டி நடைபெறும் கடாஃபி கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்து வருகிறது. மேலும் இந்த மைதானத்தின் பேட்டிங் சராசரி 162 ரன்களாக உள்ளது. இதனால் நிச்சயம் இப்போட்டி அதிக ரன்கள் கொண்ட போட்டியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
நேரலை
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 17
- இஸ்லாமாபாத் யுனைடெட் - 09
- குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - 08
உத்தேச லெவன்
குயிட்டா கிளாடியேட்டர்ஸ்: ஜேசன் ராய், சவுத் ஷகீல், கவாஜா நாஃபே, ரைலீ ரூசோ (கேப்டன்), சர்ஃபராஸ் அகமது, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், அகில் ஹொசைன், முகமது வாசிம், முகமது ஹஸ்னைன், முகமது அமீர், அப்ரார் அகமது.
இஸ்லாமாபாத் யுனைடெட்: காலின் முன்ரோ, அலெக்ஸ் ஹேல்ஸ், ஆகா சல்மான், ஜோர்டான் காக்ஸ், அசம் கான், இமாத் வாசிம், ஷதாப் கான் (கேப்டன்), ஃபஹீம் அஷ்ரஃப், நசீம் ஷா, அபைத் ஷா, டைமல் மில்ஸ்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - ஜோர்டான் காக்ஸ்
- பேட்ஸ்மேன்கள் - அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய், கவாஜா நாஃபே
- ஆல்ரவுண்டர் - சவுத் ஷகீல் (துணை கேப்டன்), ஆகா சல்மான், ஷதாப் கான் (கேப்டன்)
- பந்து வீச்சாளர்கள் - தைமல் மில்ஸ், அகில் ஹுசைன், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா.
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now