
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது முதல் இன்னிங்ஸில் 393 ரன்கள் அடித்திருந்தது. எட்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த நிலையில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளர் செய்கிறேன் என அறிவித்தார். அதன் பிறகு பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்கில் 386 அடித்து ஆல் அவுட் ஆனது.
இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி சற்று தடுமாற்றத்துடன் விளையாடி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மொத்தம் 280 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 281 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி நான்காம் நாள் முடிவில் மூன்று முக்கியமான விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.
போட்டியின் கடைசி நாளில் முதல் செஷன் மழை காரணமாக முற்றிலும் கைவிடபட்டுவிட்டது. மீதம் இருக்கும் நேரத்தில் மொத்தம் 67 ஓவர்கள் மட்டுமே வீசப்படும் என நடுவர்கள் அறிவித்திருந்தனர். அதற்குள் 174 ரன்களை ஆஸ்திரேலிய அணி அடிக்க வேண்டும். இங்கிலாந்து அணி வெற்றிபெற ஏழு விக்கெட் கைப்பற்ற வேண்டும் என இருந்தது.