உம்ரானை தொடர்ந்து ஜம்மூவிலிருந்து உருவாகியுள்ளா மற்றொரு அதிவேக புயல் வாசீம் பாஷீர்!
ஜம்மூ & காஷ்மீரைச் சேர்ந்த 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் வாசீம் பஷீர், உள்நாட்டுப் போட்டிகளில் தனது அதிவேக பந்துகளால் பேட்ஸ்மேன்களை பயமுறுத்தி வருகிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிவேக பந்துகளை வீசி மிரட்டியவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் உம்ரான் மாலிக். ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த இந்த வேகப்புயல் கடந்த ஐபிஎல் சீசனில் முன்னணி வீரர்கள் பலரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
மேலும், அதிகபட்சமாக மணிக்கு 157 கிலோமீட்டர் வேகத்தில் பந்துகளை வீசி தொடரின் மற்றும் போட்டியின் அதிவேக பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார். இவரை அடுத்த ஆண்டுக்கான தொடரிலும் ஹைதராபாத் அணி தக்க வைத்துள்ளது.
Trending
இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் இருந்து மற்றொரு உம்ரான் மாலிக் உருவெடுத்துள்ளார். 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் வாசீம் பஷீர், உள்நாட்டுப் போட்டிகளில் தனது அதிவேக பந்துகளால் பேட்ஸ்மேன்களை பயமுறுத்தி வருகிறார்.
தற்போது மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்துகளை வீசி வரும் இவரை, உம்ரான் மாலிக்கை அடையாளம் காட்டிய அதே முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தான் பட்டை தீட்டி இருக்கிறார்.
Next 150kmph from Kashmir!
— Mohsin Kamal (@64MohsinKamal) November 17, 2022
Are there more Umran Maliks in J&K? Yes, this is Waseem Bashir, a 22-year-old pacer from Kashmir, who probably bowls over 145kmph (could even be 150kmph+)!
He is a part of the J&K U-25 team and has been scaring batters with pace! #IPL teams take note pic.twitter.com/0ijkDt21xh
வாசீம் பஷீர் தற்போது ஜம்மு – காஷ்மீரின் 25 வயதுக்குட்பட்ட அணிகளில் அங்கம் வகிக்கிறார். அவரின் துல்லியமான வேகப்பந்துவீச்சு அவரை முக்கிய வீரராக மாற்றியுள்ளது. இதனால், ஐபிஎல் 2023 மினி-ஏலத்தில் பஷீரை வாங்க சில அணிகள் ஆர்வம் காட்ட அதிக வாய்ப்புள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now