
கிரிக்கெட் உலகம் பல வித்தியாசமான ஆட்டமிழப்புகளை பார்த்திருக்கிறது. கேட்ச், பவுல்டு, ரன் அவுட் , ஸ்டம்பிங் என எல்லோருக்கும் தெரிந்த ஆட்டமிழப்புகளை தாண்டி ஹிட் விக்கெட் போன்றவை உண்டு. ஏன், ஐபிஎல் போட்டிகளில் அஸ்வின் செய்த மேன்கிட் ஆட்டமிழப்பையும் கூட பார்த்திருப்போம்.
ஆனால், கிரிக்கெட் உலகம் பார்த்திராக வகையில் ஒரு ஆட்டமிழப்பு இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நிகழ்ந்துள்ளது. தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதுதான் ஹாட் டாப்பிங். அதற்கு விக்கெட் கொடுத்திருக்க கூடாது என ஒரு தரப்பும், சரியானது தான் என மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கங்களை கொட்டி வருகிறார். இதனை பலரும் இந்த ஆட்டமிழப்பு முறையை பார்த்து வியப்போடு ரசித்தும் வருகிறார்.
அப்படி என்னதான் நடந்தது. அந்த விக்கெட் குறித்து அதனை எடுத்த லீச் என்ன சொல்கிறார் என்பதை பார்க்கலாம். இங்கிலாந்து - நியூலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. நியூசிலாந்து 83 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.