உலகக்கோப்பையில் இந்த வீரர் தான் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார் - ஜாக் காலிஸ்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார் என்று ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்த முறை நடைபெற இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், முதல் முறையாக இந்தியாவில் முழுமையாக நடத்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் அக்டோபர் ஐந்தாம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இறுதிப் போட்டியில் கடந்த முறை தோல்வி அடைந்த நியூசிலாந்து மோதுகிறது.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிக முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியுடன் மோதுகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான நாள் நெருங்க நெருங்க, அதன் வெப்பம் கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி முன்னாள் வீரர்களையும் சுட ஆரம்பித்திருக்கிறது.
Trending
இதன் விளைவாக முன்னாள் வீரர்கள் பலர் யார் அதிக ரன்கள் எடுப்பார்கள்? யார் அதிக விக்கெட் வீழ்த்துவார்கள்? எந்த அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்? எந்த அணி கோப்பையை கைப்பற்றும்? என்று தங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் உலக கிரிக்கெட்டின் சிறந்த ஆல் ரவுண்டர் மற்றும் லெஜெண்ட் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் ஜாக் காலிஸ் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் யார் அதிக விக்கெட் கைப்பற்றுவார்? என்று தனது கணிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய ஜாக் காலிஸ், “என்னைப் பொறுத்தவரை நான் அன்ரிச் நோர்ட்ஜே உடன் செல்லப் போகிறேன். அவர் தென் ஆப்பிரிக்கர். நான் அவருடன் செல்ல வேண்டும். அவர் தற்போது நன்றாக பந்து வீசுகிறார். அவர் இந்த பார்மை உலக கோப்பையில் தக்க வைத்துக் கொண்டு, உலகக்கோப்பையில் நாங்கள் வெகு தூரம் முன்னேறி செல்வதற்கு உதவுவார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now