
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை எழுப்பியது.
அதுமட்டுமின்றி முன்னாள் வீரர்களும் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த 5 போட்டிகளின் கொண்ட தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடிய இந்திய அணியானது ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் இந்த தொடரில் சமநிலை வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4ஆவது போட்டியில் செப்டம்பர் 2ஆம் தேதி லண்டனில் நடைபெறுகிறது.
இந்த் நான்காவது டெஸ்ட் போட்டியிலும், அதற்கடுத்து வரும் 5வது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வினுக்கு பதிலாக விளையாடிய ஜடேஜா அடுத்த 2 ஆட்டங்களிலும் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.