Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை!

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் டாம் லாதம் விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 650 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 13, 2022 • 22:12 PM
James Anderson completes 650 wickets in Tests, becomes first pacer to reach the landmark
James Anderson completes 650 wickets in Tests, becomes first pacer to reach the landmark (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி டிரென்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி 553 ரன்களையும், அதன்பின் முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 539 ரன்களும் எடுத்தன. 

Trending


இதன்மூலம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 14 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்துக்கு தொடக்கமே மோசமாக இருந்தது.

முதல் ஓவரிலேயே ஒரு பவுண்டரி மட்டும் அடித்த கேப்டன் டாம் லாதமை க்ளீன் போல்டாக்கினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். மேலும் இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சன் வீழ்த்தும் 650ஆவது விக்கெட்டாகவும் அமைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு வேகப்பந்துவீச்சாளரும் 600 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இல்லை. இதன்மூலம், 650 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தும் முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்:

  •     முத்தையா முரளிதரன் - 800 விக்கெட்டுகள்
  •     ஷேன் வார்னே - 708 விக்கெட்டுகள்
  •     ஜேம்ஸ் ஆண்டர்சன் - 650 விக்கெட்டுகள் 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement