கும்ப்ளேவின் ரெக்கார்டை தகர்க்க காத்திருக்கும் ஆண்டர்சன்!
நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனையைப் படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை மறுநாள் (ஜூன் 2) லார்ட்ஸில் தொடங்குகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரின் போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவின் ரெக்கார்ட் ஒன்றை தகர்க்க காத்திருக்கிறார்.
Trending
அது, இந்திய அணியின் அனில் கும்ப்ளே இதுவரை 139 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 619 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை அனில் கும்ப்ளே பெற்றுள்ளார்.
இந்நிலையில், அனில் கும்ப்ளேவின் இந்த இடத்திற்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் போட்டியாக வந்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக 2003ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் ஆண்டர்சன் இதுவரை 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 614 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அதன்படி நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3ஆவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார்.
முன்னதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், உலகில் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now