Advertisement

SA20 League: பிலீப் சால்ட் அதிரடியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!

ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
James Neesham was adjudged the player of the match for his brilliant spell against Joburg Super King
James Neesham was adjudged the player of the match for his brilliant spell against Joburg Super King (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 19, 2023 • 10:35 AM

தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 19, 2023 • 10:35 AM

இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் ரீஸா ஹென்றிக்ஸ் முதல் பந்திலேயும், டு ப்ளூய் 14 ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் அரைசதம் கடந்த கையோடு, 22 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 51 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

Trending

அதன்பின் களமிறங்கிய கைல் வெர்ரெய்ன், லூயிஸ் கிரிகோரி, ரோமாரியோ செஃபெர்ட், கோட்ஸீ ஆகியோரும் வந்த வேகத்தில் நடையைக் கட்ட, நம்பிக்கை நட்சத்திரமான டொனாவன் ஃபெரீராவும் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் இறுதியில் ஆரோன் பங்கிசோ - நந்த்ரே பர்கர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். ஆனால் அவர்களால் 26 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பங்கிசோ 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 19 ரன்களை எடுத்திருந்தார். 

இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜிம்மி நீஷம் 3 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு பிலிப் சால்ட் - வில் ஜேக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் வில் ஜேக்ஸ் 34 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிலிப் சால்ட் அரைசதம் கடந்து அசத்தினார்.

இதற்கிடையில் டி பிரையன், ரைலி ரூஸொவ் ஷேன் டேட்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 13 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement