
Janette Brittin, Mahela Jayawardene and Shaun Pollock inducted into ICC Hall of Fame (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை ஹால் ஆஃப் ஃபேம் என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கவுரவித்து வருகிறது.
இந்நிலையில், ஹால் ஆஃப் ஃபேம் என்ற அந்தப் பட்டியலில் புதியதாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனேவை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டில் இலங்கை அணி டி20 உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். மேலும், ஐசிசி நடத்திய 4 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் முரளிதரன், சங்ககராவை தொடர்ந்து ஹால் ஆஃப் ஃபேம் விருது பெறும் 3ஆவது வீரர் ஆவார்.