
Jason Holder Joins West Indian Squad As Injury Replacement For Obed McCoy (Image Source: Google)
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஒபெட் மெக்காய், காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஜேசன் ஹோல்டர், 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் இணைந்துள்ளார். 29 வயதான ஜேசன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீச் அணிக்காக இதுவரை 27 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 2ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.