
Jason Roy pulls out of IPL 2022 (Image Source: Google)
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கான அட்டவணை இறுதி செய்வது, மைதானம் தேர்வு செய்வது என இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இன்னும் 4 வாரங்கள் கூட இல்லாத சூழலில் இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஜேசன் ராய் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். மெகா ஏலத்தில் இவரை குஜராத் டைட்டன்ஸ் அணி அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு வாங்கியது. மேலும் ஓப்பனிங்கிற்கும் களமிறக்க வைத்திருந்தது.
ஐபிஎல் தொடர் நடைபெறும் 2 மாதங்களும் முழுமையான பயோ பபுள் பாதுகாப்பில் இருக்க வேண்டும். எனவே மனநிலையை கருத்தில் கொண்டு வெளியேறுவதாக ஜேசன் ராய் விளக்கம் அளித்துள்ளார். இதே பிரச்சினையை கூறி பல்வேறு வீரர்களும் கடந்தாண்டு வெளியேறது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.