ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான விருதை வென்றனர் பும்ரா & மந்தனா!
ஜூன் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும், சிறந்த வீராங்கனையாக இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ஆடவருக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா மற்றும் ஆஃப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
Trending
இதில் ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதானது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது. நடந்துமுடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 8 போட்டிகளில் விளையாடி 4.17 என்ற எகனாமியில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன், தொடர் நாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் வாக்கெடுப்பின் அடிப்படையில் ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருது ஜஸ்பிரித் பும்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளதூ.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
அதேபோல் ஜூன் மாதத்தின் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, இங்கிலாந்து அணியின் மையா பௌச்சர், இலங்கை அணியின் விஸ்மி குணரத்னே ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. இதில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதங்களுடன் மூன்று போட்டிகளில் 343 ரன்களைக் குவித்து அசத்தியதன் மூலம் ஸ்மிருதி மந்தனாவிற்கு இந்த விருதானது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now