
Jasprit Bumrah becomes India's leading wicket-taker in men's T20Is (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 37ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 85 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, அதன்பின் விளையாடிய இந்திய அணி 6.3 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் யுஸ்வேந்திர சஹாலின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.