
Jasprit Bumrah Breaks Into Top-10 Of ICC Test Rankings (Image Source: Google)
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 9ஆஆவது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் மொத்தமாக 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் அவர் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.
மறுபுறம், அந்த டெஸ்டில் டக் அவுட்டான இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஓரிடம் சரிந்து 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் இப்போட்டியில் சதமடித்த ஜோ ரூட் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தியாவின் ரோஹித், ரிஷப் பந்த் ஆகியோர் முறையே 6 மற்றும் 7-ஆம் இடங்களில் நிலை கொண்டுள்ளனர். ஜடேஜா 3 இடங்கள் முன்னேறி 36-ஆவது இடத்துக்கும், கே.எல்.ராகுல் 56-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.