Advertisement
Advertisement
Advertisement

இந்திய டி20 அணியை வழிநடத்தும் முதல் பந்துவீச்சாளர் பும்ரா!

அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக இந்திய அணிக்கு 11ஆவது டி20 கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா அறிமுகமாகியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 17, 2023 • 16:17 PM
இந்திய டி20 அணியை வழிநடத்தும் முதல் பந்துவீச்சாளர் பும்ரா!
இந்திய டி20 அணியை வழிநடத்தும் முதல் பந்துவீச்சாளர் பும்ரா! (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 18 ஆம் தேதி நடக்கிறது.

இந்த தொடரானது வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில், ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணியின் ஒரு குழு தற்போது அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றது. இதில், பும்ரா, ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், திலக் வர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

Trending


இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது. 2ஆவது போட்டி 20ஆம் தேதியும், 3ஆவது போட்டி 23 ஆம் தேதியும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்திய அணிக்கு 11 ஆவது டி20 போட்டி கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா நாளை மறுநாள் நடக்கும் போட்டியின் மூலமாக அறிமுகமாகவுள்ளார். 

இதுவரையில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பும்ரா, தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், உடல் தகுதியை நிரூபித்த நிலையில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதன்மூலம் இந்திய டி20 அணியை வழிநடத்தும் முதல் வேகப்பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் ஜஸ்ப்ரித் பும்ரா பெறவுள்ளார். முன்னதாக இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திய முதல் முழுநேர வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையை ஜஸ்ப்ரித் பும்ரா பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement