மிட்செல் ஸ்டார்க் vs ஜஸ்ப்ரித் பும்ரா; ட்விட்டரில் மோதிக்கொள்ளும் ரசிகர்கள்!
ஜஸ்பிரித் பும்ராவின் விவகாரத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் திடீரென சண்டையிட்டு வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி வரும் அக்டோபர் 6ஆம் தேதியன்று ஆஸ்திரேலியா புறப்படவுள்ளது. இந்திய அணியின் முன்னணி பவுலரான ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.
முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு குறைந்தது 4 - 5 மாதங்கள் ஓய்வு தேவை எனக்கூறப்பட்டுள்ளது. எனவே அவரை நம்பி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து பிசிசிஐ நீக்கியது. இந்திய அணியின் பவுலிங் சொதப்பலாக இருந்து வரும் சூழலில் பும்ரா விலகியிருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Trending
இந்நிலையில் பும்ராவின் விலகலை வைத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இணையத்தில் சண்டையிட்டு வருகின்றனர். அதாவது ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் போட்டிகளில் எவ்வித ஓய்வும் இன்றி விளையாடுகிறார். இப்படி பணம் அதிகம் குவியும் தொடர்களில் விளையாடியவிட்டு, தேசத்திற்கான நேரம் வரும் போது சொதப்பியுள்ளார் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
மற்றொருபுறம் ஆஸ்திரேலியாவின் முக்கிய பவுலரான மிட்செல் ஸ்டார்க், எந்தவித உள்நாட்டு டி20 தொடர்களிலும் விளையாடவில்லை. ஐபிஎல், பிபிஎல் என அனைத்து வித உள்நாட்டு தொடர்களிலும் பங்கேற்காமல் சர்வதேச போட்டிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார். இதன்காரணமாக தற்போது சரியான நேரத்தில் டி20 உலகக்கோப்பைக்கு வந்துவிட்டார் என கூறப்படுகிறது.
இதனால் கொந்தளித்த இந்திய ரசிகர்கள், ஸ்டார்க்கை விட ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பவுலர் ஆவார். விக்கெட்டிலும் சரி, எகானமியிலும் சரி பும்ரா தான் முதலிடத்தில் இருப்பார். அவர் ஐபிஎல்-ல் விளையாடுவதால், இந்திய அணியை புறக்கணிக்கிறார் என்று அர்த்தம் கிடையாது. காயம் என்பது யாருக்கு, எப்போது வரும் என்று கூற முடியாது. அதனை வைத்து பேசாதீர்கள் என பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now