
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது. இதையடுத்து, ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. இதற்கு முன்னதாக இந்தியா, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதற்கான இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சென்று அங்கு 2 நாள் பயிற்சி போட்டிகளில் விளையாடிய நிலையில், தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த நிலையில், நேற்று மும்பையில் அபெக்ஸ் கவுன்சில் குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் உறுதி செய்யப்பட்டது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்க இருந்தது. ஆனால், அதன் பிறகு இந்தப் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.