ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் பதவிக் காலம் நீட்டிப்பு!
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷாவின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று ஏசிசி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் பதவிக் காலத்தை வரும் 2024ஆம் ஆண்டு வரை நீடிப்பதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவராக ஜெய் ஷா ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் நஜ்முல் ஹசன் பாப்பனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.
Trending
மேலும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) துணைத் தலைவராக பங்கஜ் கிம்ஜியும், வளர்ச்சிக் குழுவின் தலைவராக மகிந்த வல்லிபுரம் நியமிக்கப்பட்டனர்.
அதேசமயம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய் ஷா, பிசிசிஐ செயலாளராகவும் பதவிவகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now