Advertisement

10 ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுத்த உனாத்கட்; தனித்துவ சாதனை!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணியில் இடம்பிடித்ததுடன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

Advertisement
10 ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுத்த உனாத்கட்; தனித்துவ சாதனை!
10 ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுத்த உனாத்கட்; தனித்துவ சாதனை! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 02, 2023 • 10:34 PM

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 02, 2023 • 10:34 PM

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.  இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட், ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து மூன்றாவது போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.

Trending

இப்போட்டியில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான 31 வயதாகும் ஜெயதேவ் உனத்கட்  விளையாடிதன் மூலம் 9 ஆண்டு 252 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்தார். இதன்மூலம் உனாத்கட் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் ராபின் சிங், 7 ஆண்டு 230 நாள்கள் கழித்து களமிறங்கியது தான் ஒருநாள் போட்டிகளில் அதிக இடைவெளி விட்டு விளையாடியதாக இருந்தது. அதாவது முதன் முதலில் 1989ஆம் ஆண்டு விளையாடி ராபின் சிங் பின்னர் 1996இல் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

இதைத்தொடர்ந்து ஜெயதேவ் உனத்கட் கடைசியாக 2013ஆம் ஆண்டில் இந்திய ஒருநாள் அணியில் விளையாடினார். இதன் பின்னர் தற்போது 2023இல் மீண்டும் விளையாடியுள்ளார். தனது கம்பேக் போட்டியில் 5 ஓவர்கள் பந்து வீசிய உனத்கட் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement