
ரஞ்சிக் கோப்பை தொடர் டிசம்பர் 13ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெற்று வருகிறது.இதில் இன்று துவங்கியுள்ள லீக் போட்டி ஒன்றில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள சௌராஷ்டிரா, டெல்லி அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பிட்ச் துவக்கத்தில் வேகத்திற்கு சாதகமாக இருந்ததால், சௌராஷ்டிரா அணி வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் முதல் ஓவரிலேயே அபாரமாக பந்துவீசி ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி கெத்து காட்டினார். ரஞ்சிக் கோப்பையில், முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் வீழ்த்துவது இதுதான் முதல்முறை. இதற்குமுன், இர்ஃபான் பதான் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய உனாத்கட், தனது இரண்டாவது ஓவரில் இரண்டு விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். மொத்தம் 12 பந்துகளில் 5 ரன்களை விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 10 ரன்களுகு 7 விக்கெட்களை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.