
LPL 2024: ஜாஃப்னா கிங்ஸ் vs கண்டி ஃபால்கன்ஸ், குவாலிஃபையர் 2 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Jaffna Kings vs Kandy Falcons Dream11 Team: இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் ஐந்தாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கலே மார்வெல்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இடம்பிடித்திருப்பதால் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
JK vs KFL: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஜாஃப்னா கிங்ஸ் vs கண்டி ஃபால்கன்ஸ்
- இடம் - ஆர் பிரேமதாச மைதானம், கொழும்பு
- நேரம் - ஜூலை 20, இரவு 7.300 மணி
JK vs KFL: Pitch Report