SA20 League 2nd SF: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தி பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்
- இடம் - சூப்பர் ஸ்போர்ட் பார்க், செஞ்சூரியன்
- நேரம் - இரவு 9 மணி
போட்டி முன்னோட்டம்
ஃபாஃப் டூ பிளெசில் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், தொடரின் இறுதியில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவுசெய்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதற்கு முக்கிய காரணம் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ்.
ஏனெனில் நடப்பு சீசனில் விளையாடிய 10 போட்டிகளில் 2 அரைசதம், ஒரு சதம் என 369 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்தவர் பட்டியளில் முதலிடத்திலும் உள்ளார். அவரைத் தொடர்ந்து பேட்டிங்கில் லுயிஸ் டு ப்ளூய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த புதுவரவான மேத்யூ வேடும் அதிரடி காட்ட தொடங்கியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் ஃபெரீரா, ஹென்றிக்ஸ், செஃபெர்ட் ஆகியோர் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சில் ஜெரால்ட் கோட்ஸி, லிஸாட் வில்லியம்ஸ், மஹீஷ் தீக்ஷனா இருப்பது எதிரணிக்கு தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்கப்படுகிறது.
அதேசயம் மறுபுறம் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பல அபாரமான ஆட்டங்களை வெளிப்படுத்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் ஆடம் ரோஸிங்டன், ஜோர்டன் ஹார்மேன், ஜேஜே ஸ்மட்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சென் ஆகியோருடன் சமீபத்தில் அணியில் இணைந்த டெம்பா பவுமாவும் அதிரடி காட்டுவது அணிக்கான வெற்றிவாய்ப்பை அதிகரித்துள்ளது.
பந்துவீச்சில் மார்கோ ஜான்சென், சிசாண்டா மகாலா, பிரைடன் கார்ஸ், ஜேம்ஸ் ஃபுல்லர் ஆகியோருடன் ஐடன் மார்க்ரம், ஜேஜே ஸ்மட்ஸும் அவ்வபோது விக்கெட்டுகளை வீழ்த்துவது அணியின் பந்துவீச்சு யுனிட்டை வலுப்படுத்தியுள்ளது.
நேருக்கு நேர்
மோதிய போட்டிகள் -02
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - 02
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்டன் -0
உத்தேச லெவன்
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), ரீசா ஹென்ட்ரிக்ஸ், லியூஸ் டு ப்ளூய், சிபோனெலோ மகன்யா, மேத்யூ வேட், டொனாவன் ஃபெரீரா, ரொமாரியோ ஷெப்பர்ட், ஜெரால்ட் கோட்ஸி, கைல் சிம்மன்ட்ஸ், லிசாட் வில்லியம்ஸ், மஹீஷ் தீக்ஷனா.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஆடம் ரோஸிங்டன், டெம்பா பவுமா, ஜோர்டான் ஹெர்மன், ஐடன் மார்க்ரம் (கே), ஜேஜே ஸ்மட்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், சிசாண்டா மாகலா, ரோலோஃப் வான் டெர் மெர்வே, பிரைடன் கார்ஸ், ஜேம்ஸ் ஃபுல்லர்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - மேத்யூ வேட், ஆடம் ரோஸிங்டன்
- பேட்டர்ஸ் - ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், ஐடன் மார்க்ரம், லியுஸ் டு ப்ளூய்
- ஆல்-ரவுண்டர்கள் - மார்கோ ஜான்சன், கைல் சிம்மண்ட்ஸ்
- பந்துவீச்சாளர்கள் - ரோலோஃப் வான் டெர் மெர்வே, சிசண்டா மகலா, ஜெரால்ட் கோட்ஸி, மஹீஷ் தீக்ஷனா
கேப்டன்/துணை கேப்டன் விருப்பங்கள் - ஐடன் மார்க்ரம், ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், மார்கோ ஜான்சன், கைல் சிம்மண்ட்ஸ், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஜெரால்ட் கோட்ஸி
Win Big, Make Your Cricket Tales Now