பத்தாயிரம் ரன்களைக் கடந்து ஜோ ரூட் சாதனை!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ஜோ ரூட், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என்ற புதிய பயணத்தை இங்கிலாந்து அணி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்த முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆண்டர்சன் மற்றும் பாட்ஸ் ஆகியோரின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் இங்கிலாந்து விளையாடியது.
92 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணி 100 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்த தடுமாறியது. பிறகு அந்த அணியால் 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 9 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்த அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. 2வது இன்னிங்சிலும் வில்லியம்சன், வில் யங், டாம் லாத்தம், கான்வே உள்ளிட்ட வீரர்கள் சொதப்பினர்.
Trending
இருப்பினும் டேரல் மிட்செல் அபாரமாக விளையாடி சதமும்,டாம் பிளாண்டல் 96 ரன்களும் எடுக்க, மற்ற வீரர்கள் சொதப்பியதால் நியூசிலாந்து அணி 285 ரன்களில் ஆட்டமிழந்தது. 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் லீஸ் 20 ரன்களும், ஷாக் கிராலி 9 ரன்களும், போப் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களத்தில் சேர்ந்த ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்டோக்ஸ் 54 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் தனது 26வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தப் போட்டியின் 2ஆவது இன்னிங்சில் சதம் விளாசிய ஜோ ரூட் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இந்த இன்னிங்ஸ் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் படைத்தார். மேலும் 1990 களில் பிறந்து, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 10 அயிரம் ரன்களை எட்டியவர் என்ற பெருமையும் ஜோ ரூட் பெற்றார்.
Win Big, Make Your Cricket Tales Now