
ஐபிஎல் பாணியில் நடைபெறும் தென் ஆப்பிரிக்க டி20 தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்குகிறது. இதில் பங்குபெறும் அணிகளை ஐபிஎல் அணிகளே வாங்கியதால் இதன் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த தொடருக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி மிரட்டலான அணியை உருவாக்கியது. ஜோகனஸ்பர்க் அணியின் கேப்டனாக ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக விளையாடிய டுபிளஸிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏலத்திற்கு முன்பே சூப்பர் கிங்ஸ் அணி, மொயின் அலி, மகிஷ் தீக்சனா, ரோமேரியோ செஃபர்ட் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோயிட்சே ஆகியோரை ஏலத்தில் எடுத்தது.
எனினும் மொயின் அலி இந்த தொடரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் அதிரடி இளம் வீரராக கருதப்படும் டோனோவன் ஃபெராரியாவை சூப்பர் கிங்ஸ் அணி தட்டி தூக்கியது. 19 டி20 போட்டியில் விளையாடி 384 ரன்களை ஃபெராரியா குவித்துள்ளார். அவருடைய சராசரி 54 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 148 ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் 2 கோடியே 47 லட்சம் ரூபாயை கொடுத்து அவரை ஏலத்தில் சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது.