
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசன் மும்பை இந்தியன்ஸுக்கு படுமோசமானதாக தொடங்கியுள்ளது. 5 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் ஆடிய 5 போட்டிகளிலும் படுமோசமாக தோல்வியடைந்தது.
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி மயன்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவானின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 198 ரன்களை குவித்தது. 199 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 186 ரன்கள் அடித்து 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் பயிற்சியாளர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக்கொள்ளும்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரும் தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டருமான ஜாண்டி ரோட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்தார்.