விண்டீஸூக்கு எதிராக புதிய வரலாறு படைத்த ஜோஸ் பட்லர்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை ஜோஸ் பட்லர் படைத்துள்ளார்.

பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இந்த போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்ந்தது. இதில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 47 ரன்களையும், ஷாய் ஹோப் 49 ரன்களையும், ரோவ்மேன் பவல் 34 ரன்களையும் மற்றும் ஜேசன் ஹோல்டர் 29 ரன்களைச் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் லுக் வுட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் 47 ரன்களையும், ஹாரி புரூக் 34 ரன்களையும், பென் டக்கெட் 30 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டாம் பான்டன் 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 18.3 ஓவர்களில் 197 ரன்கள் என்ற இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜோஸ் பட்லர் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் ஜோஸ் பட்லர் 47 ரன்களைச் சேர்த்ததன் மூலம், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் எடுத்த வீரர் எனும் பில் சால்ட்டின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 14 டி20 போட்டிளில் மட்டுமே விளையாடிய நிலையில் 640 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில் தற்போது ஜோஸ் பட்லர் 24 போட்டிகளில் 22 இன்னிங்ஸ்களில் 5 அரைசதங்களை அடித்து 658 ரன்கள் எடுத்ததுடன் முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
விண்டீஸுக்கு எதிராக அதிக டி20 ரன்களை எடுத்த இங்கிலாந்து வீரர்கள்
- ஜோஸ் பட்லர் - 24 போட்டிகளில் 22 இன்னிங்ஸ்களில் 658 ரன்கள்
- பில் சால்ட் - 14 போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் 640 ரன்கள்
- அலெக்ஸ் ஹேல்ஸ் - 13 போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் 423 ரன்கள்
- இயோன் மோர்கன் - 15 போட்டிகளில் 15 இன்னிங்ஸ்களில் 258 ரன்கள்
Win Big, Make Your Cricket Tales Now